/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அறுவடை நிலங்களில் மயில்கள் முகாமிடும் வேட்டை நபர்கள்
/
அறுவடை நிலங்களில் மயில்கள் முகாமிடும் வேட்டை நபர்கள்
அறுவடை நிலங்களில் மயில்கள் முகாமிடும் வேட்டை நபர்கள்
அறுவடை நிலங்களில் மயில்கள் முகாமிடும் வேட்டை நபர்கள்
ADDED : ஏப் 01, 2025 05:22 AM

சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டை, ஆத்துார், கன்னிவாடி பகுதியில் நெல், மக்காச்சோள அறுவடை விளைநிலங்களில் மயில்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை வேட்டையாடுவதற்காக கும்பல் முகாமிடுவதும் தொடர்கிறது.
ஆத்துார், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், காமராஜர் நீர்த்தேக்க பகுதி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, அய்யம்பாளையம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது. அறுவடைக்கு பின் வயல்களில் சிதறி கிடக்கும் நெல் மணிகளுக்காக மயில்கள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் முகாமிட துவங்கி உள்ளன. இதையடுத்து மயில்களை வேட்டையாடுவதற்காக மர்ம கும்ப கும்பல் ஆட்டோக்கள், டூவீலர் சகிதமாக சம்பந்தப்பட்ட விலை நில பகுதிகளில் முகாம் இடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
கன்னிவாடி, பண்ணைப்பட்டி, மூலச்சத்திரம் பகுதியில் மக்காச்சோள சாகுபடி நிலங்களில் அறுவடைக்குப் பின் விடுபட்ட மக்காச்சோள மணிகளை உண்பதற்காக மயில்கள் அதிக அளவில் வர துவங்கி உள்ளன. இச்சூழலை பயன்படுத்தி வேட்டையாடும் நபர்களின் நடமாட்டமும் இப்பகுதியில் வெகுவாக அதிகரித்துள்ளது. தேசிய பறவையான மயில்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை அதிகரிக்க முன்வர வேண்டும்.
-