ADDED : ஏப் 18, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: 70 வயது முடிந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட தலைவர் தங்கப்பன் தலைமை வகித்தார்.
துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் சின்னக்காளை முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஜெகராஜன், கல்யாணசுந்தரம், தங்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.