/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயனற்ற பள்ளி கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் அரசின் வினோத நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி

ADDED : அக் 01, 2024 05:37 AM

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கட்டடம் சேதமடைந்து வளாகம் பயனற்று கிடக்கும் நிலையில் சேதமான கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டப்படாமல் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவங்கிய வினோத நடவடிக்கையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வடமதுரை மோர்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இரு கட்டடங்களுடன் செயல்பட்ட இப்பள்ளியில் ஒரு கட்டடம் சிலஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து அகற்றப்பட்டது. எஞ்சிய ஒரு கட்டடத்தில் 60 மாணவர்களுடன் பள்ளி இயங்கிய நிலையில் அதுவும் சேதமடைய தற்போது ஒன்றரை ஆண்டுகளாக அருகில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. வாடகை கட்டடமும் வீடு என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர். அவ்வப்போது கட்டடத்தின் வெளிப்புற மரத்தடியில் மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்படுகிறது. காலை, மதிய உணவு திட்ட சாப்பாடுகளை நாடக மேடையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பள்ளி புதிய கட்டடம் அமைவதில் இழுபறி உள்ள நிலையில் பயனற்று கிடக்கும் பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் பணி கட்ட துவங்கியதால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஊராட்சி தலைவர் சிவசக்தி கூறுகையில், ''பள்ளி கட்டடம் சேதமாகும் முன்னரே சுற்றுச்சுவருக்கான திட்ட அனுமதி கோரி சென்றதால் தற்போது பணி துவங்கியது. இதனிடையே சேதமான கட்டடத்தை அகற்றவும் தற்போது நிர்வாக அனுமதி வந்துள்ளதால் எந்த பணியை முதலில் செய்வது என்பதை அதிகாரிகள் முடிவு செய்வர்'' என்றார்.