/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான தண்ணீர் தொட்டிகளால் அச்சமடையும் மக்கள்...
/
சேதமான தண்ணீர் தொட்டிகளால் அச்சமடையும் மக்கள்...
ADDED : டிச 02, 2024 04:32 AM

ரோட்டில் உலர்த்தும் மூலிகைகள் : அய்யலுாரில் பஸ் ஸ்டாப் அருகில் தார் ரோட்டில் மூலிகை தழைகளை உலர்த்தும் நோக்கில் பரப்பி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்து அபாயமும் உள்ளது. இதை வியாபாரிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். ----
---கருப்பையா, அய்யலுார்.
--------
வீணாகும் தண்ணீர் : திண்டுக்கல் வேடப்பட்டி முத்துராமலிங்க தேவர் சந்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பல லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது. தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலு, திண்டுக்கல்.
சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் குப்பை : பழநி புது ஆயக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் அதிக அளவில் குப்பைகள் கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் நோய் தொற்று அபாயமும் உள்ளது.
-முகமது ஜின்னா, மானுார்.
--------சேதமான தண்ணீர் தொட்டி : வேடசந்துார் பேரூராட்சி 15வது வார்டில் சேதமடைந்த தண்ணீர் தொட்டியால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் சேதம் அடைந்து கம்பிகள் நீட்டி உள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும்.
-ராஜா,வேடசந்துார்.
--------
ஆபத்தான நிலையில் மின்கம்பம் : நிலக்கோட்டை அணைப்பட்டி விளாம்பட்டி ரோட்டில் சேதமான மின் கம்பத்தை இரும்பு பட்டைகளால் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. மழை காற்று நேரங்களில் ஒடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலசந்தர், நிலக்கோட்டை.
ரோட்டோரங்களில் கழிவுகள் : ஆத்துார் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சி ஜே.புதுக்கோட்டையில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியம் நீடிக்கிறது. ரோட்டோரங்களில் பாலிதீன் கழிவுகளை குவித்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும். -
-சோ.செந்தில்குமார், ஜே.புதுக்கோட்டை.
கழிவுநீரால் அவதி : பழநி திருஆவினன் குடி தெற்கு வாசலில் பல மாதங்களாக அசுத்தமாக உள்ளது. சாக்கடையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். முறையாக கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த், பழநி.