/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலம் சேதத்தால் 7 கி.மீ., துாரம் சுற்றும் மக்கள்
/
பாலம் சேதத்தால் 7 கி.மீ., துாரம் சுற்றும் மக்கள்
பாலம் சேதத்தால் 7 கி.மீ., துாரம் சுற்றும் மக்கள்
பாலம் சேதத்தால் 7 கி.மீ., துாரம் சுற்றும் மக்கள்
ADDED : டிச 12, 2025 07:07 AM

நெய்க்காரப்பட்டி: பழநி குதிரையாறு அணைப்பகுதியில் தரைப்பாலம் பல நாட்களாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் பூஞ்சோலை கிராம மக்கள் 7 கி.மீ., துாரம் சுற்றும் நிலையில் சிரமம் அடைகின்றனர்.
பழநி பகுதியில் குதிரை ஆற்றில் சில நாட்களுக்கு முன் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பூஞ்சோலை கிராமத்திற்கு செல்ல பயன்படும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
விவசாய மக்கள் சிரமம் அடைகின்றனர். தரைப்பாலம் சேதமடைந்ததால் குதிரை ஆறு அணையின் மேல் உள்ள பாதையில் 7 கிலோமீட்டர் துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. பூஞ்சோலை , அருகில் உள்ள கிராமங்கள் செல்லும் பாதை பாதிக்கப்படாமல் இருக்க உறுதி தன்மையுடன் பாலம் அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.