தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காலி குடங்களுடன் மக்கள் ரோடு மறியல்

காலி குடங்களுடன் மக்கள் ரோடு மறியல்

காலி குடங்களுடன் மக்கள் ரோடு மறியல்


UPDATED : செப் 28, 2026 03:47 PM

ADDED : செப் 28, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 03:47 PM ADDED : செப் 28, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எரியோடு:செல்லக்குட்டியூர் மக்கள் குடிநீர் பிரச்னைக்காக காலி குடங்களுடன் எரியோடு தோப்புபட்டியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

கோவிலுார் ஊராட்சி செல்லக்குட்டியூரில் 6 நீர்த்தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. அருகில் சிக்கையகவுண்டன்குளத்தில் நிறுவிய 2 ஆழ்துளை கிணறுகள், காவிரி குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் நடந்தது.

இந்நிலையில் உள்ளூர் நீர் ஆதாரங்கள் வறண்டு போக, காவிரி நீரும் கிடைக்காமல் கடந்த சில வாரங்களாக இப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் தீர்வு கிடைக்கவில்லை.

அதிருப்தியில் இருந்த மக்கள் காலி குடங்களுடன் தோப்புப்பட்டி வந்து திண்டுக்கல் குஜிலியம்பாறை மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

வேடசந்துார் பி.டி.ஓ., கற்பகம், எரியோடு இன்ஸ்பெக்டர் வினோதா பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக்கூறி போராட்டத்தை கைவிட செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us