/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் தடைக்கு தீர்வு கோரி மெழுகுவர்த்தி ஏந்தி மனு; குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
/
மின் தடைக்கு தீர்வு கோரி மெழுகுவர்த்தி ஏந்தி மனு; குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
மின் தடைக்கு தீர்வு கோரி மெழுகுவர்த்தி ஏந்தி மனு; குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
மின் தடைக்கு தீர்வு கோரி மெழுகுவர்த்தி ஏந்தி மனு; குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
ADDED : ஆக 19, 2025 01:02 AM

திண்டுக்கல்; மின் தடைக்கு தீர்வு கோரி மெழுகு வர்த்தி ஏந்தி வந்து மனு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முறையிட திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 130 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் , பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், செல்வம், தனித்துணை ஆட்சியர் செந்தில்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சீர்மரப்பினர் நல அலுவலர் சுகுமார், சமூக நல அலுவலர் கரோலின் கலந்துகொண்டனர்.
சாணார்பட்டி ஒன்றியம் ஜி.பாறைப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கிராமத்தில் 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
குடியிருப்பு, சாக்கடை கால்வாய், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கவில்லை. ஏராளமானோர் வீடுகளின்றி தவிக்கின்றனர். எனவே எங்கள் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கொடைக்கானல் தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு உட்பட 4 பேர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி வந்து அளித்த மனுஅளித்தனர்.
அதில், வத்தலக்குண்டை ஜி.தும்பலப்பட்டி பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க அரசு உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணி நடக்கவில்லை.
இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உரிய தீர்வு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.