/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ஜன்னல்களால் அச்சமடையும் மக்கள்...
/
சேதமான ஜன்னல்களால் அச்சமடையும் மக்கள்...
ADDED : பிப் 09, 2024 05:03 AM

செயல்படாத சிக்னலால் அச்சம்
ஒட்டன்சத்திரத்தில் பழநி தாராபுரம் ரோடு சந்திப்பில் உள்ள சிக்னல் பல நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன் ஒட்டன்சத்திரம்.------
கழிவுநீரால் அவதி
வடமதுரை இ.பி.காலனியிலிருந்து முல்லாம்பட்டி பகுதிக்கு செல்லும் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகால் கட்டமைப்பில் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. கழிவு நீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்துாரி, வடமதுரை.---
பாலத்தில் ஏற்பட்ட துளை
கோபால்பட்டி நத்தம்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கன்னியாபுரம் சந்தானவர்த்தினி ஆற்றுப்பாலத்தில் சிறுவர்கள் உள்ளே விழும் அளவிற்கு துளை உள்ளது. இதை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டியன், கே.அய்யாபட்டி.-------
போஸ்டர்களால் தவிப்பு
திண்டுக்கல் பொன்மாந்துறை ஊர் பெயர் பலகையை போஸ்டர்கள் ஒட்டி அளித்துள்ளனர். இதனால் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு ஊர் பெயர் தெரியாமல் சுத்தி செல்கின்றனர். பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க வேண்டும். அருண்,திண்டுக்கல்.---------
சேதமான ஜன்னல்களால் ஆபத்து
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கட்டடத்தில் ஜன்னல் பகுதி சில இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வருவோர் அச்சத்துடன் செல்கின்றனர். ஜன்னல் பகுதியை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். ஜெயக்குமார்,திண்டுக்கல்.---------
சாக்கடையால் சுகாதாரக்கேடு
சிவகிரிப்பட்டி ஊராட்சி 8 வது வார்டு ஓ.பி.சி.சர்ச் ரோட்டில் சாக்கடை கால்வாய் கான்கிரீட் போட்டு அடைத்துள்ளனர். 2 மாதங்களாக சாக்கடை நீர் அங்கேயே தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவபாலாஜி, சிவகிரி பட்டி.-----------
குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல் கூட்டுறவு நகரில் குப்பையை கொட்டி பல நாட்களாக அப்படியே கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் குப்பைகள் ரோடெல்லாம் சிதறி கிடைக்கிறது. குப்பையைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார் கூட்டுறவுநகர்.
---------

