/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் குடிநீரின்றி அவதி
/
டிரான்ஸ்பார்மர் பழுதால் மக்கள் குடிநீரின்றி அவதி
ADDED : அக் 19, 2024 05:27 AM
குஜிலியம்பாறை, : வடுகம்பாடி ஊராட்சி சீலமநாயக்கன் களத்துாரில் 30 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் 15 விவசாய மின் மோட்டார்களும், குடிநீர் மோட்டார் இணைப்பும் உள்ளது.
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் சீலமநாயக்கன்களத்துாரில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது.இதுவரை பழுது பார்க்காததால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் குடிநீருக்காக 4 கி.மீ., துாரம் உள்ள கோவிலுார் குஜிலியம்பாறை மெயின் ரோட்டில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் குடிநீர் பிடித்து வருகின்றனர். மின் சப்ளையும் இல்லததால் இப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். மக்கள் நலன் கருதி மின் இணைப்பை வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

