/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகளால் அவதிப்படும் மக்கள்
/
சேதமான ரோடுகளால் அவதிப்படும் மக்கள்
ADDED : நவ 11, 2024 04:50 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் தற்போது காவிரி குடிநீர் திட்டப்பணிகள் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கு தெரு ரோடுகள் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதனால் தெருக்களில் பாதிக்கு மேல் ரோடுகள் பெயர்ந்துள்ளது. பணிகள் முடிந்து பல நாட்கள் கடந்த பின்னும் இதுவரை ரோடுகளை சீரமைக்கவில்லை.
இதனால் தெருவுக்குள் செல்லும் டூவீலர்கள்,ஆட்டோக்கள்,கார்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
பள்ளிகள் தொடங்கும்,முடியும் நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.
இதனால் ரோடு பள்ளமாகவும் கால்வாய் உயரமாகவும் இருப்பதால் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. பல சமயங்களில் விபத்துக்கு வழிவகை செய்கிறது. இதை சீரமைக்க வேண்டும்.