sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடுகளில் வீணாகும் குடிநீரால் தவிக்கும் மக்கள்...

/

ரோடுகளில் வீணாகும் குடிநீரால் தவிக்கும் மக்கள்...

ரோடுகளில் வீணாகும் குடிநீரால் தவிக்கும் மக்கள்...

ரோடுகளில் வீணாகும் குடிநீரால் தவிக்கும் மக்கள்...


ADDED : பிப் 17, 2025 05:16 AM

Google News

ADDED : பிப் 17, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் வீணாகும் குடிநீர் : பழநி- திண்டுக்கல் ரோடு பழநியாண்டவர் கல்லுாரி பஸ் ஸ்டாப்பிலிருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைத்து தண்ணீர் வீணாக செல்கிறது. சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விக்னேஸ்வரன்,பழநி.

கழிவுநீரால் பாதிப்பு : திண்டுக்கல் நந்தவனப்பட்டி கணேஷ் நகரில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பத்மநாதன், நந்தவனப்பட்டி.

தொற்று பரப்பும் சாக்கடை : தாண்டிக்குடி போஸ்ட் ஆபிஸ் செல்லும் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் மாத கணக்கில் செல்கிறது. இவ்வழியே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடந்து செல்வதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலன், தாண்டிக்குடி.

குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் கோபால சமுத்திரம் கரை கிழக்கு பகுதியில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது. பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும்.

-முனியாண்டி, திண்டுக்கல்.

பயன்படுத்த முடியாத பாதை : அய்யலுார் களர்பட்டியில் ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் மூடி இருக்கும் பொழுது பாதசாரிகள் வெளியேற வசதியாக இருக்கும் பாதையை பயன்படுத்த முடியாதபடி புதிய கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். --

-செந்தில்குமார், அய்யலுார்.

தெரு நாய்களால் அச்சம் : சின்னாளப்பட்டி இந்தியன் வங்கி அருகே நாய்கள் ஏராளமாக உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆங்காங்கே நாய்கள் உள்ளதால் அச்சப்படுகின்றனர். கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணக்குமார், சின்னாளப்பட்டி.

சேதமான மின்கம்பம் : எரியோடு போஸ்ட் ஆபீஸ் மின்கம்பம் சேதம் அடைந்து சிமெண்ட் பூச்சு கம்பி வெளியே தெரிவதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் மக்கள் அதன் அருகே செல்ல பயப்படுகின்றனர். மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், எரியோடு.






      Dinamalar
      Follow us