/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நவராத்திரி உற்ஸவத்தில் அம்பு எய்த பெருமாள்
/
நவராத்திரி உற்ஸவத்தில் அம்பு எய்த பெருமாள்
ADDED : அக் 13, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா அக்.3ல் துவங்கியது. நாள்தோறும் வெவ்வேறு மண்டகபடிதாரர்களால் நவராத்திரி கொழு உற்ஸவ வழிபாடு நடந்தது.
பத்தாம் நாளான நேற்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகள் வழியே நகர் வலம் வந்தார். திருச்சி ரோடு மங்கம்மாள் கேணியில் பாரிவேட்டை நடக்க அம்பு எய்தும் நிகழ்ச்சி நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வடமதுரை மீனாட்சி அம்மன், காளியம்மன், மாரியம்மன், அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமுத்து மாரியம்மன் கோயில்களிலும் 10 நாட்கள் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது.