/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீரற்ற வேகத்தடைகளால் தொடரும் விபத்து; வாகனங்கள் எரிபொருள் வீணாவதோடு பழுது
/
சீரற்ற வேகத்தடைகளால் தொடரும் விபத்து; வாகனங்கள் எரிபொருள் வீணாவதோடு பழுது
சீரற்ற வேகத்தடைகளால் தொடரும் விபத்து; வாகனங்கள் எரிபொருள் வீணாவதோடு பழுது
சீரற்ற வேகத்தடைகளால் தொடரும் விபத்து; வாகனங்கள் எரிபொருள் வீணாவதோடு பழுது
ADDED : டிச 08, 2024 04:52 AM

வடமதுரை, டிச.8-- திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ரோடுகளில் முறையற்று அமைக்கப்படும் வேகத்தடைகளால் சிறிய ரக வாகனங்களில் பழுது ஏற்படுவதும், எரிபொருள் வீணாவதோடு விபத்துக்களுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களை இணைக்கும் வகையில் உள்ள ரோடுகளை தேசிய நெஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் தனித்தனியே பராமரிக்கின்றன.
இவ்வற்றில் குடியிருப்புகள், பள்ளிகள் இருக்கும் இடங்களில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை அந்தஸ்து, நெடுஞ்சாலை பராமரிப்பு ரோடுகளை புதுப்பிக்கும் போது வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் வெள்ளை நிறத்தில் 'தெர்மோ பிளாஸ்ட் சிமென்ட் கோட்டிங்' முறையில் வெள்ளை வர்ணம் பூசப்படுகிறது. இங்கு மட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் வர்ணம் பூசுகின்றனர்.
ஆனால் கிராம ரோடுகளில் இதுமாதிரி விபத்து தடுப்பு பணி செய்வதில்லை. அத்துடன் வேகத்தடைகளை இஷ்டத்திற்கு அதிக உயரமாகவும் அமைக்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் வழக்கமான வேகத்தில் செல்லும் டூவிலர், கனரக வாகனங்கள் வேகத்தடைகளை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் என்றால் வேகத்தடை அறவே தெரிவதில்லை. வேகத்தடை இருப்பதை உணர்த்தும் வகையில் ரோட்டோரம் எச்சரிக்கை பலகைகளும் பல இடங்களில் இல்லை. இதனால் டூவீலர்களில் செல்வோர் பலர் விழுந்து உயிர்களை இழந்துள்ளனர். அனைத்து ரோடுகளிலும் இருக்கும் வேகத்தடைகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 'தெர்மோ பிளாஸ்ட் சிமென்ட் கோட்டிங் முறையில் வெள்ளை வர்ணம் பூசுவதுடன் , உயர அளவுகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.