/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரவு நேரத்தில் ரோடு வளைவுகளில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு; கண் கூசும் எதிர் திசை வாகன விளக்கால் விபத்துகள்-

UPDATED : ஆக 18, 2025 07:54 AM
ADDED : ஆக 18, 2025 02:56 AM

-மாவட்டத்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய ரோடுகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாகவும், சென்டர் மீடியன் எனப்படும் மையத்தில் ரோடு இரு கூறாக பிரிக்கும் அமைப்பு கொண்டதாகவும் மாறி வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம், திருச்சி, மதுரை, கரூர், கோயம்புத்துார் வழிககள் நான்கு வழிச்சாலையாக மாறியுள்ளன.
இதுதவிர எரியோடு வழியே கரூர் ரோட்டிலும், வத்தலக்குண்டு ரோட்டிலும் சென்டர் மீடியன் அமைப்புடன் ரோடு அகலமாக்கும் பணி நடக்கிறது.
இவ்வழித்தடங்களில் எதிரே வாகனங்களின் முகப்பு விளக்குகள் இரவு நேரத்தில் கண் கூச வைக்கும் என்பதால், அதனை தவிர்க்க சென்டர் மீடியன் பகுதிகளில் அரளி செடிகள் வளர்க்கப்படுகிறது. இவற்றை ஆடு, மாடு சாப்பிடாது என்பதால் இதற்காக அவை ரோட்டின் மையப்பகுதிக்கு வராது என்பதாலும், வேர் அதிகம் பரவி ரோட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதற்காக வளர்க்கப்படுகிறது.
ரோடு பணி துவக்கத்தில் அதிக ஆர்வத்துடன் பராமரிக்கப்பட்ட சென்டர் மீடியன் அரளி செடிகள் தற்போது பல இடங்களில் அறவே மறைந்தும், காய்ந்தும் கிடக்கின்றன. குறிப்பாக வளைவு பகுதிகளில் எதிர் திசை வாகனங்களின் முகப்பு விளக்கு பிரகாசம் வாகன ஓட்டிகளை அதிகளவில் பாதிக்கிறது.
தொடர்ந்து சீராக வாகனங்களை செலுத்த முடியாமல் தடுமாற செய்கிறது. முன்னே செல்லும் வாகனங்கள் சரிவர தெரியாமல் விபத்துகளை ஏற்படுத்துகிறது.
எனவே, நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியன்களில் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக வளைவு பகுதிகளில் அரளி செடி மறைப்பு இருப்பதை உறுதிப்படுத்த நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.