/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அகற்றப்படும்
/
திண்டுக்கல்லில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அகற்றப்படும்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அகற்றப்படும்
திண்டுக்கல்லில் அனுமதியின்றி பேனர் வைத்தால் அகற்றப்படும்
ADDED : ஜன 20, 2024 05:14 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் அகற்றுவோம்,'' என திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் நாராயணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதே...
திண்டுக்கல் நகரில் தினமும் நகரமைப்பு துறையை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து தான் வருகின்றனர். மேற்கு ரதவீதி,சாலை ரோடு பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொது மக்கள் புகாரளித்த நிலையில் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தபால் அனுப்பி இருக்கிறோம். விரைவில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலும் ஆக்கிரமிப்பு உள்ளதே...
பஸ் ஸ்டாண்டில் கடை நடத்த அனுமதி பெற்ற கடைகளை தவிர ரோட்டோர கடைகளை அடிக்கடி அகற்றி வருகிறோம். மீண்டும் அவர்கள் பழைய நிலையை போல் கடைகளை அமைக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலுடன் பொது மக்களுக்கு இடையூறு தான் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகள் இருப்பதால் தான் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. பஸ் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதையும் அகற்றுவோம் .
பாதாள சாக்கடைகளை துார்வார ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளதே...
நகரின் முக்கிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் வாசல்கள் பாதாள சாக்கடை செல்லும் பாதைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். இதனால் ஆண்டுக்கணக்கில் சாக்கடைகள் துார்வாராமல் அப்படியே கிடக்கிறது. மழை நேரங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் கழிவுநீர் ரோட்டிற்கு வருகிறது. சுகாதாரக்கேடையும் ஏற்படுத்துகிறது. இதைத்தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பாதாளசாக்கடை வடிகால் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் படிக்கட்டுகளை அகற்றுகிறோம். தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் போலீசாரோடு இணைந்து செய்யப்படும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் அறிவிப்பு வழங்கப்படுகிறதா...
மாநகராட்சி தரப்பில் பல பகுதிகளில் அறிவிப்புகளுடன் பெயர் பலகைகள் வைக்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி வேலிகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை தடுக்கிறோம். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு முன் பொது அறிவிப்புகள் கொடுப்போம். அதன்பிறகுதான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்படுகிறதே...
திண்டுக்கல் நகரில் கட்டடங்கள் கட்டுவதற்கு முன் மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற பிறகு தான் பணிகளை தொடங்க முடியும். எவ்வளுவு துாரம் கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறதோ அதை தாண்டி கட்டினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலில் முறையற்ற கட்டடங்களும் இடிக்கப்படுகிறது.
ரோட்டோரங்களில் பேனர்கள் ஆக்கிரமிப்புகளும் உள்ளதே ...
ரோட்டோரங்களில் பேனர்கள் வைப்பதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வரி செலுத்த வேண்டும். அனுமதியின்றி வைத்திருக்கும் பேனர்களை அகற்றுகிறோம் என்றார்.