ADDED : ஜன 06, 2026 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைபள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் அன்னை மதர்தெரசா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜெரால்டு ஸ்டீபன் செல்வா தலைமை வகித்தார். திண்டுக்கல் மறை மாவட்ட பாதிரியார் சகாயராஜ், கல்வி குழு செயலாளர் மெல்கிலாரன்ஸ், பாதிரியார்கள் அந்தோணி, பெர்னாட்ஷா, கஸ்பார், டோமினிக் சேவியர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.வி.அமர்நாத் விளையாட்டு ஆடுகளத்தை திறந்து வைத்தார். கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

