/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்காணிக்கலாமே: ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றப்படும் பள்ளி சிறார்கள்
/
கண்காணிக்கலாமே: ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றப்படும் பள்ளி சிறார்கள்
கண்காணிக்கலாமே: ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றப்படும் பள்ளி சிறார்கள்
கண்காணிக்கலாமே: ஆட்டோக்களில் அதிகளவில் ஏற்றப்படும் பள்ளி சிறார்கள்
UPDATED : ஜூன் 07, 2025 04:56 AM
ADDED : ஜூன் 07, 2025 02:12 AM

பழநி,:ஆட்டோக்களில் அதிகளவில்  மாணவர்களை ஏற்றி செல்வதை   அரசு துறையினர் கண்டுக்காமல் விடுவதால் விபத்துக்கள் அதிகரிக்கும்  போக்கு  நிலவுகிறது .
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து மாணவர்கள் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.   பள்ளி  பஸ் ,தனியார் வாகன வசதிகள் மூலம்  மாணவர்களை பெற்றோர்  அனுப்புகின்றனர். பள்ளி  பஸ்கள் முறைப்படி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனுமதி பெற்று தேவையான பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறது.    தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் குறிப்பாக ஆட்டோக்களில் அனுப்பும் பெற்றோர்கள் அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கையில் மட்டும் மாணவர்களை ஏற்றி செல்ல ஆட்டோக்களில் அறிவுறுத்த வேண்டும்.  மாணவர்கள் பாதுகாப்பாக அமரும் வகையில் இட வசதிகளை செய்து தர ஆட்டோ  டிரைவர்களும் முன் வர வேண்டும். இதனை பள்ளி நிர்வாகம், பெற்றோர்களும்  கண்காணிக்க வேண்டும். ஆட்டோ  டிரைவர்களும் பொறுப்புடன் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து  சென்று திரும்ப அழைத்து வர வேண்டும். இதோடு இதை போலீசார் ,வட்டார போக்குவரத்து துறையினரும் கண்காணிக்க வேண்டும்.
மவுனம் காக்கின்றனர்
பள்ளி மாணவர்களை அழைத்து  செல்லும் ஆட்டோ  டிரைவர்கள்    பெரும்பாலும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர். ஒரு சிலர் பள்ளி நேரத்தை கடைப்பிடிக்க வேகமாக செல்லும் போக்கை கடைபிடிக்கின்றனர்.  இதனால் விபத்துக்கு வழி வகுக்கிறது.  ஆட்டோக்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றி செல்லும் போக்கும் நடக்கிறது .இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் ,வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்.
பிரசாந்த், போட்டோகிராபர், பொருந்தல் .

