UPDATED : நவ 20, 2026 08:01 PM
ADDED : நவ 20, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் 37.
அணைப்பட்டி ரோட்டில் காமாட்சிபுரம் பிரிவில் மது அருந்தி கொண்டிருந்தார். அதே இடத்தில் அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் பால்பாண்டித்துரையும் 45, மது அருந்தினார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின் அடிதடி நடந்ததில் காயமடைந்த அறிவழகன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பால்பாண்டிதுரை மீது நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
