காவலாளி தற்கொலை
வடமதுரை:வேலாயுதம்பாளையம் பெரிய நாகனுாரை சேர்ந்தவர் கிருஷ்ணபெருமாள் 51. வடமதுரை நுாற்பாலையில் காவலாளியாக பணிபுரிந்தார். சில மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்ட இவர் விஷம்குடித்து தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.
ஒருவர் கைது
பழநி :பழநி சுற்றுவட்டார பகுதியில் டூ வீலர் அடிக்கடி திருடு போனது. இதில் 22ல் ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தி வைத்திருந்த டூவீலர் திருடு போனது. பழநி டவுன் போலீசாருக்கு புகார் வந்தது. இந்நிலையில் நேற்று வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ள போது ரயில்வே ஸ்டேஷனில் திருடு போன டூவீலரை ஒருவர் ஓட்டி வந்தார். அவரை போலீசார் விசாரித்ததில் மதுரை மாவட்டம் நரிமேட்டைச் சேர்ந்த தங்கபாண்டி 38. இவர் பைக் திருடியது உறுதியானது. பழநி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.
தந்தையை தாக்கிய மகன் கைது
வேடசந்துார்: வேடசந்துார் கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் அருண்குமார் 32. வெளியூரில் வசிக்கும் இவர் சொந்த ஊருக்கு வந்தார். இவரது தந்தை செபஸ்தியாருக்கும் அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார்,மது பாட்டிலால் தந்தை செபஸ்தியாரை 56, தாக்கினார். இருவரும் காயமடைந்த நிலையில் வேடசந்துார் எஸ்.ஐ., யோகராணி நேற்று அருண்குமாரை, கைது செய்து சிறையில் அடைத்தார்.