போக்சோவில் கைது
நிலக்கோட்டை:- நிலக்கோட்டை அக்ரகாரப்பட்டி பாண்டி மகன் அருண் பிரசாத் 24. 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை திருமணம் செய்து கொள் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். சிறுமியின் தாயார் கேட்டபோது உனது மகளை கட்டிக் கொடு இல்லை எனில் ரூ.7 லட்சம் பணம் கொடு என மிரட்டியுள்ளார். நிலக்கோட்டை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சர்மிளா அருண் பிரசாத்தை போக்சோ வில் கைது செய்தனர்.
எருமை மாடு மீட்பு
வேடசந்துார்: சாலையூர் நால்ரோட்டில் உள்ளது கேரளாவை சேர்ந்த கிளிப்டரஸ் 35,தோட்டம். இவர் வளர்த்து வரும் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தது. வேடசந்துார் தீயணைப்பு அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் கிரேன் உதவியுடன் மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
முயல் வேட்டை: 4 பேர் கைது
ரெட்டியார்சத்திரம் : ஜி.கோவில்பட்டி தோட்டத்து சாலை பகுதியில் கன்னிவாடி ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்நில் ஈடுபட்ட போது முயல் வேட்டையில் ஈடுபட்ட மாரம்பாடி இருதயராஜ் 42, சேசு 65, அமுதன் அலெக்ஸ் 39, சேவியர் ராஜ் 50, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வலை, வேட்டையாடப்பட்ட முயல்கள், காடையை பறிமுதல் செய்தனர்.
நகை பறித்த இருவர் கைது
சத்திரப்பட்டி: பழநி சத்திரப்பட்டி அருகே மஞ்ச நாயக்கன்பட்டியில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் டூவீலரில் வந்த இருவர் நான்கு பவுன் நகையை பறித்து சென்றனர். சத்திரப்பட்டி போலீசார் சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டியைச் சேர்ந்த கேசவன் 40, ராஜா 37 ,ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
தற்கொலை
பழநி: பழநி சித்தா நகரில் வசித்து வந்தவர் பூசாரி சிவபெருமாள் 40. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கில் தொங்கி இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.