ADDED : அக் 14, 2024 08:40 AM
விவசாயி பலி
நிலக்கோட்டை: குல்லிசெட்டிபட்டியை சேர்ந்த விவசாயி பொன்ராம் 53. தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது பாம்பு கடித்தது. நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் முதியவர் படுகாயம்
செந்துறை: நத்தம் செந்துறை திருநுாத்துபட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை 70. இவர் சொறிப்பாறைபட்டியை சேர்ந்த பாண்டி, என்பவருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து நத்தம் நோக்கி சென்றார். மங்களபட்டி பிரிவு அருகே பாறைக்குளம் பகுதியில் சென்றபோது சிரங்காட்டுபட்டியை சேர்ந்த பழனிவேல், என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர்கள் மீது மோதியது. இதில் முதியவர் சின்னக்காளைக்கு, காயம் ஏற்பட்டது. எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார்.
பெண் தற்கொலை
நெய்க்காரப்பட்டி: பழநி பெத்தநாயக்கன்பட்டியில் வசிப்பவர் முனியம்மா 45. குடும்ப பிரச்சினை காரணமாக தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். உடலை கைப்பற்றி பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.