விபத்தில் பெண் பலி
பட்டிவீரன்பட்டி: செம்பட்டி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி அன்னலட்சுமி 36. இருவரும் தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினர். செங்கட்டாம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கேரளா சுற்றுலா பஸ் மோதியதில் அன்னலட்சுமி பலியானார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
வடமதுரை: தென்னம்பட்டியில் வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன், போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற ஊத்துப்பட்டி பாண்டியராஜனை 23, கைது செய்தனர். 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காதல் ஜோடி தஞ்சம்
பட்டிவீரன்பட்டி : கே. சிங்கார கோட்டையை சேர்ந்தவர் கோவிந்தசாமி 18. தனியார் கல்லூரியில் படிக்கிறார். அதே ஊரை சேர்ந்த சந்தியா 19, கல்லுாரி மாணவி. உறவினர்களான இவர்கள் 2 ஆண்டுகளாக காதலித்தனர். கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் கோயிலில் திருமணம் செய்தனர். இருவீட்டாரும் தேடுவதை அறிந்து பட்டிவீரன்பட்டி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க , மணமக்கள் மேஜர் என்பதால் அவரவர் விருப்பம் போல் சேர்ந்து வாழ போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கார் மோதி தொழிலாளி காயம்
நத்தம்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே மேலவளவு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா 50. டூவீலரில் சம்பபட்டி பிரிவு அருகே சென்றபோது எதிரே பொந்துகம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் 44 , ஓட்டி வந்த கார் மோதியது. சுப்பையாக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் மீது டிராக்டர் மோதல்
தாடிக்கொம்பு: ஒட்டன்சத்திரம் பொருளுரை சேர்ந்தவர் தனியார் ஆட்டோ ஏஜென்சி சேல்ஸ்மேன் சிவசங்கர் 29. திண்டுக்கல் பெஸ்கி காலேஜ் அருகில் உள்ள தனியார் ஷோரூமுக்கு வந்த டூ வீலரை ஓட்டிக்கொண்டு சென்றார். கணேசபுரம் அருகே சென்றபோது எதிba குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த பிரிட்டோ ஒட்டி வந்த டிராக்டர் மோதியது. காயeடைந்த சிவசங்கர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா விசாரிக்கிறார்.