/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் விபத்தில் வாலிபர் பலி
/
போலீஸ் செய்திகள் விபத்தில் வாலிபர் பலி
ADDED : நவ 07, 2025 04:29 AM
விபத்தில் வாலிபர் பலி
வடமதுரை: ஜார்க்கண்ட் மாநிலம் ஜெகநாத்பூர் கோச்ரா பகுதியை சேர்ந்தவர் சாந்தனு கிரி 31. வேடசந்துார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தன்னுடன் வேலை பார்க்கும் ஜெக்மோகன் கும்கர் 26, உடன் டூவீலரில் தென்னம்பட்டி பகுதியில் சென்றபோது மாரம்பாடி தோப்பூர் சேகர் ஓட்டி வந்த டிராக்டர் மோதியது. சாந்தனு கிரி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் தற்கொலை
வேடசந்துார்: சாலையூர் நால்ரோட்டை சேர்ந்தவர் பூபதி ராஜா 24. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சாலையூர் நால்ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். பால் வியாபாரமும் செய்தார். வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின் கேபிள் திருட்டு
வடமதுரை: திண்டுக்கல் திருச்சி நான்குவழிச்சாலையோரம் செம்பன் பழனியூரில் அய்யலுார் முடக்குபட்டி விவசாயி மாரியப்பன் தோட்டம் உள்ளது. இங்குள்ள ஆழ்துளை கிணற்றிற்கு மின்சப்ளைக்காக அமைக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 100 மீட்டர் மின் கேபிள் திருடப்பட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை பறிப்பு
வேடசந்துார்: குஞ்சுவீரன்பட்டியில் நன்மை தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம் தெளிக்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி அதே ஊரை சேர்ந்த தெய்வானை 60, அணிந்திருந்த 5 பவுன், வீரம்மாள் அணிந்திருந்த 3 பவுன் என 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
வேடசந்துார்: தர்மபுரியை சேர்ந்தவர் கனரக லாரி டிரைவர் கிருஷ்ணன் 44. துாத்துக்குடியில் இருந்து லாரியில் உப்பு மூடை ஏற்றி கொண்டு கர்நாடகா சென்றார். வேடசந்துார் கல்வார்பட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

