தகராறில் கைது
நத்தம்:- செல்லம்புதுாரை சேர்ந்தவர் ஓய்வு அரசு ஊழியர் அழகர்சாமி 61. இவர் சின்னையம்பட்டியை சேர்ந்த பிரபுக்கு 43, 2023ல் நான்கு லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தார். பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை . பிரபு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். பிரபுவை நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் கைது செய்தார்.
பஸ் மீது மோதிய கார்
வேடசந்துார்: தீர்த்தாக்கவுண்டன்பட்டி பொறியாளர் செல்வகுமார் 29. தாராபுரத்தில் இருந்து காரை ஓட்டி வந்தார் . நவாமரத்துப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது வேகத்தடையை கவனிக்காததால் வேகமாக ஏறியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பஸ் ஸ்டாப்பில் நின்ற தனியார் பஸ்சின் பின்புறமாக மோதியது. செல்வகுமார் லேசான காயங்களுடன் தப்பினார். வேடசந்தூர் எஸ்.ஐ., பழனிச்சாமி விசாரிக்கிறார்.
புதுப்பெண் மாயம்
வடமதுரை: சுக்காம்பட்டி பாலமடைப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி 19. இவருக்கும் கொம்பேறிபட்டி ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த வாலிபருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. தாய் வீட்டில் இருந்து வந்த மகாலட்சுமியை காணவில்லை. வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.
பெண்ணை வெட்டியவர் கைது
ஆயக்குடி : எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த துரைசாமி மனைவி சசிகலா 60. மே 3 ல் அதே பகுதியில் 100 நாள் பணி செய்து வந்தார். அங்கு வந்த உறவினரான தங்கவேல் 65, சொத்து குறித்த தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டினார். அதே பகுதியில் மறைந்திருந்த தங்கவேலை ஆயக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
வேன் மோதி பலி
வடமதுரை: தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பையா 26. நேற்று மாலை டூவீலரில் வடமதுரை ரோட்டில் சென்றபோது அவ்வழியே வந்த சுற்றுலா வேன் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.