சங்க தலைவர் பலி
பழநி: கச்சேரி புது தெருவை சேர்ந்தவர் பழநி வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் திருமூர்த்தி 70. செப்.,14 ல் மானுார் சுவாமி கோயில் அருகே செல்லும்போது (ஹெல்மெட் அணியவில்லை) நின்ற டூவீலரில் மோதியது. இதில் கீழே விழுந்த அவர் இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவு நபர் கைது
திண்டுக்கல்: கிழக்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள் ஜெயபிரகாஷ் 42. 2015ம் ஆண்டு விபசார வழக்கில் திண்டுக்கல் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்ற விசாரணையில் 10 ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.இதை தொடர்ந்து அருள் ஜெயப்பிரகாசை தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர்.
விரோதத்தில் வீடு சூறை
வடமதுரை : பாடியூரை சேர்ந்தவர் ஜெயபாரதி 30. இவருக்கும் அதே பகுதி வேன் டிரைவர் வேல்முருகன் இடையே முன்விரோதம் உள்ளது. ஜெயபாரதி குடும்பத்தினருடன் சுந்தரபுரி சென்றார். அப்போது ஜெயபாரதியின் வீட்டின் கதவை உடைத்து 'டிவி' , பிரிட்ஜ், பீரோ, தையல் மிசின் உள்ளிட்ட பொருட்களை வேல்முருகன் உடைத்து நொறுக்கினார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.