போலீஸ்காரர் காயம்
வேடசந்துார் : அய்யலுார் தீர்த்தாகிழவனுாரை சேர்ந்தவர் முதல் நிலை போலீஸ் காரர் கார்த்திக் 39. ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் சாலையூர் நால்ரோடு அருகே டூவீலரில் வந்தபோது முன்னாள் சென்ற மண் அள்ளும் இயந்திரம் நின்றதால் மோதினார். காயமடைந்த கார்த்திக் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெடசந்துார் எஸ்.ஐ., தர்மர் விசாரிக்கிறார்.
புகையிலை பறிமுதல்
நத்தம் : நத்தம் பகுதி மளிகை கடை , பெட்டி கடைகளில் -இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன்,எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சடையம்பட்டி பிரிவு பகுதி பெட்டிகடையில் சோதனை செய்தபோது புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த சண்முகத்தை 43, கைது செய்தனர். 14 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி தற்கொலை
நத்தம்: வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் சந்தனம் 51. மது குடிக்கும் பழக்கம் இருந்தது . சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.