கைவிரலை கடித்தவர் கைது
பழநி: பொன்காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி 39. இவர் அதே பகுதி சேர்ந்த பரிமளாவை அவதுாறாக பேசியதாக கூறி பரிமளாவின் உறவினர்கள் மனோன்மணியுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மகுடீஸ்வரன் 26, மனோன்மணியின் கைவிரலை கடித்துள்ளார். கருப்புசாமி 35, கோட்டை முத்து 30, மகுடீஸ்வரன் ஆகியோரை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்றவர் கைது
வடமதுரை : தென்னம்பட்டி ரோட்டில் வடமதுரை எஸ்.ஐ., பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா பாக்கெட்டுகளை விற்ற மொட்டணம்பட்டி வேல்முருகனை 28, கைது செய்தனர்.
பஸ் கவிழ்ந்து விபத்து
தாடிக்கொம்பு : தேனியிலிருந்து பெங்களூர் நோக்கி தனியார் பஸ் சென்றது. தேனி போடியை சேர்ந்த அப்பாஸ் மந்திரி ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு குடகனாறு பாலம் அருகே சென்றபோது பஸ் கவிழ்ந்தது. சசிபிரபா உட்பட 22 பேர் காயமடைந்தனர். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

