பழநி பக்தர் காயம்
வேடசந்துார்: புதுக்கோட்டை மாவட்டம் குப்பையன்பட்டி தொழிலாளி முருகானந்தம் 48. பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றார். வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஓரமாக நடந்து சென்றபோது டூவீலர் மோதியதில் காயமடைந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய் கடித்து இருவர் காயம்
ஆயக்குடி: பழநி ஆயக்குடியை சேர்ந்த அருண் 26,அருணகிரி 40, இருவரையும் தெரு நாய் கடித்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயக்குடி பகுதியில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண் உடல் மீட்பு
பழநி : கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில் அருகே தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் 40 வயதுள்ள நீல சட்டை அணிந்த ஆண் உடல் மிதந்தது. தீயணைப்புத் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் மீட்பு படையினர் மீட்டனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
கார் மோதி ஓய்வு ஆசிரியர் பலி
தாடிக்கொம்பு: திண்டுக்கல் மருதம் மாணிக்க நகரில் வசிப்பவர் ஓய்வு ஆசிரியர் மாரிமுத்து 65. நந்தவனப்பட்டி சர்வீஸ் ரோடு தனியார் கார் ஷோரூம் அருகே சென்றபோது அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டு இறந்தார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., முனியாண்டி விசாரிக்கிறார்.
கார் மோதி மூவர் காயம்
தாடிக்கொம்பு : திண்டுக்கல் சீலப்பாடி ஜி.டி.என்., கல்லுாரி அருகே வசிப்பவர் பாலசுப்பிரமணியம் மனைவி ரேணுகாதேவி 36. சென்னையில் உள்ள இவரது அப்பா ராஜேந்திரன் 65, அம்மா செல்வி 58, தம்பி குங்குமராஜ், அவரது மனைவி ஸ்வேதா என 4 பேர், ரேணுகாதேவிக்கு சொந்தமான காரில் கோயிலுக்கு சென்றனர். குங்குமராஜ் ஓட்டி சென்றார். பழைய கரூர் ரோட்டில் ஜி .டி. என்., காலேஜ் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. ஸ்வேதா தவிரத்து மூவரும் காயமடைந்தனர். தாடிக்கொம்பு எஸ் .ஐ .,சூரியகலா விசாரிக்கிறார்.
கூடிய இளைஞர்கள் ; எச்சரித்த போலீஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆங்கில புத்தாண்டையொட்டி கொண்டாட்டங்கள், கேளிக்கைகளுக்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் திண்டுக்கல், சிறுமலை ரோடு வாழக்காய்ப்பட்டி பிரிவில் உள்ள தனியார் மண்டபம் அருகே புத்தாண்டு நிகழ்ச்சிக்காக கூட்டம் கூடினர். தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அங்கமுத்து தலைமையிலான போலீசார் கொண்டாட்டங்கள் கூடாது என எச்சரிக்கை விடுத்து அனைவரையும் கலைந்துப்போக செய்தனர். இதனால் இளைஞர்கள் திரும்பினர்.

