ADDED : மார் 20, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார்: திண்டுக்கல் மாவட்டம் பழநி கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் தலைமை காவலர் திருக்குமரன் 54,குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
கீரனுார் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு ஆண்டாக பழநியை சேர்ந்த திருக்குமரன் 54, தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார். வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த இவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீரனுார் போலீசார் விசாரித்தனர்.