விபத்தில் காயம்
நத்தம்: கோவில்பட்டியை சேர்ந்த தொழிலாளி சிவசங்கர் 20. இவர் நேற்று காலை நத்தம்- முடக்குசாலை பகுதியில் நடக்கும் தவசிமடை ஜல்லிக்கட்டிற்கு செல்ல மாடு ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து கீழக்கரைக்கு மாடு ஏற்றி வந்த மினிவேன் மோதியது. இதில் சிவசங்கருக்கு காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கால் முறிவு
வேடசந்துார்: கோடாங்கிபட்டியை சேர்ந்த தொழிலாளி பிரேம்குமார் 19. நேற்று மதியம் வேடசந்துார் ஆத்து மேட்டிற்கு டூவீலரில் வந்தார். திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது. இதில் பிரேம்குமாரின் வலது கால் முறிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர்கள் மோதி மூவர் காயம்
வடமதுரை: அய்யலுார் பழைய சித்துவார்பட்டியை சேர்ந்த ஜஸ் வியாபாரி தண்டபாணி 54. வியாபாரத்திற்காக நேற்று கோப்பம்பட்டி பிரிவு அருகே டூவீலரில் சென்றபோது பின்னால் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சிலம்பு 27, ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.
சிலம்பு, அவருடன் வந்த நண்பர் ஹரிகிருஷ்ணன் 26, தண்டபாணி என மூவரும் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.