/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்துக்கு போஸ்டர்
/
சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்துக்கு போஸ்டர்
ADDED : டிச 26, 2025 05:47 AM
நிலக்கோட்டை: நிலக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகம் நுாறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இங்கு பழமையான ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன.
தற்போது வரை ஊரின் மையப் பகுதியில் போக்குவரத்திற்கு வசதியான இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம் நிலக் கோட்டையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் துாரத்தில் காட்டுப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
நிலக்கோட்டை வட்டார வர்த்தக வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் தமிழக முதல்வர், கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
நடவடிக்கை இல்லாததால் நிலக்கோட்டை பகுதியில் சார் பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

