/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
/
முருகன் கோயில்களில் சஷ்டி வழிபாடு
ADDED : டிச 26, 2025 05:46 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது.
அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், ரயிலடி சித்தி விநாயகர் கோயில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதணை நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, குள்ளனம்பட்டி முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தது.
பழநி : பழநி முருகன் கோயிலில் நேற்று சஷ்டியை தொடர்ந்து கிருஸ்துமஸ், அரையாண்டு விடுமுறையால் அதிகளவில் பக்தர்களின் கூட்டம் இருந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் கிறிஸ்மஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. அடிவாரம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
கன்னிவாடி : தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால் அபிஷேகம் செய்ய விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நத்தம் : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருக பெருமானுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. காமாட்சி மவுனகுருசுவாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி , வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

