/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேசிய நெடுஞ்சாலைகளில் உருவாகும் பள்ளங்கள்: பராமரிப்பு அறவே இல்லாததால் பயணிகள் அச்சம்
/
தேசிய நெடுஞ்சாலைகளில் உருவாகும் பள்ளங்கள்: பராமரிப்பு அறவே இல்லாததால் பயணிகள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உருவாகும் பள்ளங்கள்: பராமரிப்பு அறவே இல்லாததால் பயணிகள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலைகளில் உருவாகும் பள்ளங்கள்: பராமரிப்பு அறவே இல்லாததால் பயணிகள் அச்சம்
UPDATED : மே 27, 2025 07:29 PM
ADDED : மே 27, 2025 01:18 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல ரோடுகளில் பராமரிப்பு என்பது அறவே இல்லாமல் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிப்படும் நிலை தொடர்கிறது .
மாவட்டத்தில் தேசிய, மாநில, மாவட்ட, ஊரக ரோடுகள் பல கிலோமீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கிராம ரோடுகள் ,மாவட்ட ரோடுகளில் பள்ளங்கள் உடனடியாக சரி செய்யப்படுவது இல்லை. இதுபோல் மாநில,தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பள்ளங்களும் உடனடியாக சரி செய்யப்படுவதில்லை. அப்படியே சரி செய்யப்பட்டாலும் தரத்துடன் அமைக்கப்படுவதில்லை. இதனால் ரோடுகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக டூ வீலர் ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் மீது நெடுஞ்சாலை துறையினர்,உள்ளாட்சிகள் தனி கவனம் செலுத்த வேண்டும்.
............
சரி செய்ய வேண்டும்
பழநி வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி, வண்டி வாய்க்கால், தாழையூத்து பகுதி ரோடுகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அமரபூண்டி செல்லும் ரோடு சேதமடைந்து உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.சண்முக நதி, வண்டி வாய்க்கால் பகுதிகளில் தற்போது பெய்த சிறு மழைக்கு ரோடு சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இரவு நேரத்தில் டூவீலர்களில் வருபவர்கள் நிலை தடுமாறி விழுகின்றனர். கொழுமம் ரோடு ஓரங்களில் குழாய் அமைக்கும் பணிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடாததால் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இவற்றை தனி கவனம் கொண்டு சரி செய்ய வேண்டும்.
பிரகாஷ், சமூக ஆர்வலர், பழநி.
...........