UPDATED : நவ 24, 2026 08:15 PM
ADDED : நவ 24, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
செம்பட்டி:
பவுர்ணமியை முன்னிட்டு அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குஞ்சனம்பட்டி பிச்சை சித்தர் கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
