/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலையில் சீரானது மின் விநியோகம்
/
சிறுமலையில் சீரானது மின் விநியோகம்
ADDED : ஏப் 11, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தினமலர் செய்தி எதிரொலியாக சிறுமலை மலைக்கிராமங்களில் மின்சாரம் விநியோகம் சீரானது.
சிறுமலை கிராமங்களில் ஏப். 6ல் பெய்த மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தது.இதையடுத்து இரு நாள்களாக மின்சாரம் தடைப்பட்டு மக்கள் அன்றாட பயன்பாடு பாதிக்கப்பட்டது. தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து சிறுமலை புதுாரில் மின் இணைப்புகளுக்கு மாற்று மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும் சாய்ந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.

