/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாகசிவா சிட் பண்ட் நிறுவனருக்கு பாராட்டு
/
நாகசிவா சிட் பண்ட் நிறுவனருக்கு பாராட்டு
ADDED : அக் 04, 2025 04:05 AM

நத்தம்: புனேவில் நடந்த விழாவில் நத்தம் நாகசிவா சிட்பண்ட் நிறுவனத்தின் மக்கள் சேவையை பாராட்டி அதன் நிறுவனர் நாகராஜ் பெரியசாமி பிள்ளைக்கு உலக சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் லண்டன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதை பாராட்டி நத்தத்தில் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நினைவுப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.
நாகசிவா சிட்பண்ட் நிர்வாக இயக்குநர் சிவபிரசாத், நாகராஜ்திவ்யா, அர்ஜூன், செந்துறை முன்னாள் ஊராட்சி தலைவர் சவரிமுத்து, வ.உ.சி.பேரவை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சரவண செல்வம், கம்யூனிஸ்ட் நிர்வாகி ஸ்டாலின், பங்குதாரர்கள் குப்புச்சாமி, தர்மராஜன், செந்தில்குமார், முருகன் செல்லமுத்து, திருச்சி மணிகண்டன், பாலகணேஷ், முருகேசன் மாரிமுத்து, ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் குமரவடிவேல் கலந்து கொண்டனர்.
நாகராஜ் பெரியசாமி பிள்ளை நன்றி கூறினார்.