UPDATED : அக் 15, 2026 04:42 PM
ADDED : அக் 15, 2026 04:38 PM
சாணார்பட்டி: கோபால்பட்டியில் இயங்கும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அக்., 5ல் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் சார்பில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வேம்பார்பட்டி மண்டபத்தில் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, டாஸ்மாக் கோடவுன் உதவி மாவட்ட மேலாளர் ஜெயக்குமார், சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 45 நாட்கள் காலஅவகாசம் கோரப்பட்டது.
தொடர்ந்து கடையை இடமாற்றம் செய்வதற்கான முயற்சியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
