/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை ஓகே; விளைச்சல் இல்லை பாதிப்பில் முருங்கை விவசாயிகள்
/
விலை ஓகே; விளைச்சல் இல்லை பாதிப்பில் முருங்கை விவசாயிகள்
விலை ஓகே; விளைச்சல் இல்லை பாதிப்பில் முருங்கை விவசாயிகள்
விலை ஓகே; விளைச்சல் இல்லை பாதிப்பில் முருங்கை விவசாயிகள்
ADDED : நவ 23, 2025 03:25 AM
ஒட்டன்சத்திரம்: முருங்கைக்காய் கிலோ ரூ.240 க்கு விற்ற போதிலும் விளைச்சல் இல்லாததால் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயன் இல்லாமல் போனது .
ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி, முருங்கை, வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இவை ஒரே ஆண்டில் உச்சபட்ச விலைக்கு விற்பதும் விலை மிகவும் குறைந்து வீதியில் கொட்டப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
சில நாட்களாக முருங்கை கிலோ ரூ.50க்கு கீழ் விற்றது. இதனால் முருங்கை பயிரிட்ட விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் முருங்கை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் மார்க்கெட்டில் வரத்து மிகவும் குறைந்து போனது.
சபரிமலை சீசன் , திருமண விழாக்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப முருங்கை விலை தினந்தோறும் அதிகரித்து வந்தது. நேற்று கரும்பு முருங்கை கிலோ ரூ.240 க்கு விற்றது.
முருங்கை விலை உச்சபட்ச விலைக்கு விற்ற போதிலும் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளதால் பயிரிட்ட விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

