/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதத்தில் ஆரம்பசுகாதார நிலையம்; பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்
/
சேதத்தில் ஆரம்பசுகாதார நிலையம்; பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்
சேதத்தில் ஆரம்பசுகாதார நிலையம்; பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்
சேதத்தில் ஆரம்பசுகாதார நிலையம்; பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டு மக்கள்
ADDED : அக் 19, 2024 05:17 AM

ஒட்டன்சத்திரம், : சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலையம், பயன்படுத்தப்படாத கழிப்பறை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 7வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் அதிகம் உள்ளன.
தும்மிச்சம்பட்டிபுதுார், கஸ்துாரி நகர், மாருதிநகர், நாயக்கனுார் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கன்னிமார் கோயில் பகுதியில் குழாய்கள் உடைந்து உள்ளதால் போர்வெல் இருந்தும் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இங்கு மேல்நிலை தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை பிரிக்கப்பட்டு சொந்த கட்டடத்தில் இயங்குகிறது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டில் உள்ளது.
ஒட்டன்சத்திரம் மலை அடிவாரத்தில் இருந்து தும்மிச்சம்பட்டிபுதுார், கஸ்தூரிநகர் வழியாக செல்லும் ஓடையை துார்வாரும் பணி நடந்து வருகிறது. கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் சமுதாய சுகாதார வளாகம் உள்ளது. பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் அப்படியே உள்ளது.
விரிவாக்கப் பகுதிகளில் ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயக்கனுார் செல்லும் ரோட்டில் உள்ள சிறு மின்விசை பம்ப் கட்டடம் விழும் நிலையில் உள்ளது.
குழாய்களை சீரமையுங்க
முத்துராமன், முன்னாள் கவுன்சிலர்: தும்மிச்சம்பட்டிபுதுார் பகுதியில் உள்ள குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
கன்னிமார் கோயில் பகுதியில் உடைந்த குழாய்களை சீரமைத்து தடையின்றி போர்வெல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். பூங்கா இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நாயக்கனுார் ரோட்டை சீரமைத்து கஸ்தூரி நகர் பகுதியில் வீடுகளுக்கு போர்வெல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும்.
குடிநீர் பிரச்னை இல்லை
கார்த்திக், தி.மு.க., வார்டு துணை செயலாளர்:வார்டுக்குள் தேவையான இடங்களில் தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளது. வார்டு மக்களுக்கு என தனியாக ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது வார்டுக்கென தனியாக ரேஷன் கடை பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது. தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
கனகராஜ், கவுன்சிலர்(தி.மு.க.,): அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வார்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ரேஷன் கடை பிரிக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெருக்களில் உள்ள தார் ரோடுகள் அனைத்தையும் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வார்டு வழியாகச் செல்லும் ஓடையை துார்வாரும் பணி நடந்து வருகிறது. ஓடை ரோட்டில் புதிய மின்கம்பங்கள் நிறுவப்பட்டு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நாயக்கனுாரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கன்னிமார்கோயில், கஸ்தூரி நகர் பகுதியில் போர்வெல் தண்ணீர் வீடுகளுக்கே வினியோகம் செய்யும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.