/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீசாரிடமிருந்து தப்பிய கைதி துாக்கிட்டு தற்கொலை
/
போலீசாரிடமிருந்து தப்பிய கைதி துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஏப் 29, 2025 07:04 AM

செம்பட்டி : திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்பிய செம்பட்டி போக்சோ கைதி வினித் 25, நான்கு நாட்களுக்கு பிறகு சொந்த ஊரில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செம்பட்டி அருகே போடிக்காமன்வாடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வினித். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்தார். அதே ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செம்பட்டி போலீசார் போக்சோ வழக்கில் ஜன., 30ல் இவரை கைது செய்தனர்.
திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை ஏப்., 23ல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செம்பட்டி எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ், ஏட்டு ஆரோக்கியசாமி ஆகியோர் டூவீலரில் அழைத்து சென்றனர். பின் மீண்டும் சிறைக்கு அவரை அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே வினித் டூ வீலரில் இருந்து குதித்து தப்பினார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சொந்த ஊரான போடிக்காமன்வாடி தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

