/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி வேன் மீது தனியார் பஸ் மோதல்
/
பள்ளி வேன் மீது தனியார் பஸ் மோதல்
ADDED : டிச 16, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: கரூர் - திண்டுக்கல் நோக்கி தனியார் மொபசல் பஸ் 50 பயணிகளுடன் சென்றது. டிரைவர் கார்த்தி 34, என்பவர் ஓட்டினார். வேடசந்தூர் அமைதி கல்லூரி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற தனியார் பள்ளி வாகனம் அங்கே உள்ள கட் ரோட்டில் வலது புறமாக திரும்பியது. அப்போது பஸ், பள்ளி வேனின் பின்பகுதியில் மோதியது.
இதில் பஸ் முன்புற கண்ணாடி நொறுங்கியது. பள்ளி வாகனத்தை தாடிக்கொம்பு, கள்ளிப்பட்டி சதீஷ்குமார் 32 ஓட்டினார். பள்ளி வாகனத்தில் நான்கு குழந்தைகள் இருந்த நிலையில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

