/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்: வீடியோ வைரல்
/
தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்: வீடியோ வைரல்
ADDED : அக் 26, 2025 06:22 AM
நெய்க்காரபட்டி: பழநி பகுதியில் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்ல அதிவேகமாக போட்டி போட்டு தாறுமாறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்ற வீடியோ வைரலாகிறது.
பழநி சுற்றுப்பகுதிகளில் தனியார் பஸ்கள் கிராம பகுதிகளில் உள்ள பயணிகளை ஏற்றி வருகின்றன. உள்ளூர் பகுதியில் ஓடும் தனியார் பஸ்கள் இடையே டைம் இன் பிரச்னை காரணமாக பயணிகளை ஏற்றுவதில் போட்டி நிலவு வருகிறது.
இந்நிலையில் நெய்க்காரப்பட்டி கரடி கூட்டம் அருகே தனியார் பஸ், மினி பஸ் இடையே டைமிங் பிரச்னையால் ஏற்பட்ட போட்டி காரணமாக தாறுமாறாக ஓடிய வீடியோ வைரலாகிறது. பஸ் நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் மீது ஏற்றுவது போல் தனியார் பஸ் வேகமாக வருவதும் பயணிகள் அலறியபடி ஓடி விலகி நிற்பதை முன்னாள் சென்ற பஸ்சில் இருந்த நபர் படம்
பிடித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி உள்ளது. பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

