/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியார் பஸ்கள் மோதி விபத்து; 20 பேர் காயம்
/
தனியார் பஸ்கள் மோதி விபத்து; 20 பேர் காயம்
ADDED : செப் 27, 2025 04:31 AM
பழநி: ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே விருப்பாச்சியில் இரு தனியார் பஸ்கள் மோதியதில் ஏழு பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே விருப்பாச்சியில் நேற்று காலை திண்டுக்கலில் இருந்து பழநி நோக்கி வந்த தனியார் பஸ், விருப்பாச்சி பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்குவதற்காக நின்றிருந்தது. அப்போது மதுரையில் இருந்து பழநி நோக்கி வந்த தனியார் பஸ் நின்ற பஸ் பின்புறத்தில் மோதியது.
மதுரையிலிருந்து வந்த பஸ்சில் பயணித்த மதுரையை சேர்ந்த சதீஷ்குமார் 28, கணேசன் 58, போதுமணி 50, பார்த்திபன் 25, செல்வநாராயணன் 55, ராமலட்சுமி 40, விஜயலட்சுமி 39, நம்மாழ்வார் 80, தனலட்சுமி 40, விஜயலட்சுமி 39, நம்மாழ்வார் 80, தனலட்சுமி 80, சுதர்சன் 30, ரமேஷ் 37, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிருந்தா 20,ஆயக்குடியை சேர்ந்த மாலதி 44, ஆத்துரை சேர்ந்த மணிமேகலை 18, ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர் ராஜ் 58, சுதா 40, சதீஷ்குமார் 30, காயமடைந்தனர்.
சத்திரப்பட்டி போலீசார் விசாரித்தனர்.