நாளை மறுநாள்(நவ.20) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாளை மறுநாள்(நவ.20) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
UPDATED : நவ 18, 2026 10:01 PM
ADDED : நவ 18, 2026 08:52 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (நவ.,20) காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்க உள்ளது.
இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது கல்விச் சான்று, ஆதார் அட்டை, புகைப்படம், சுய விவரங்கள் அடங்கிய பயோடேட்டா ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம்.
தனியார்துறை வேலை அளிப்பவர்கள் தேவைப்படும் பணியாளர்களின் விபரங்கள், தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரங்கள் அனைத்தையும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தெரிவிக்க வேண்டும்.
இம்முகாமில் பங்கேற்க https://tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்வது அவசியம். கூடுதல் விபரங்களுக்கு 63815 52624 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.
