/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
/
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 09, 2025 03:37 AM
திண்டுக்கல்: மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வழங்கினர்.
திண்டுக்கல்லில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. டிராகன்ஸ் கோப்பை, பிரஸித்தி வித்யோதையான கோப்பை, ஓட்டல் பார்சன் கோர்ட் கோப்பை, மது ஸ்கேன்ஸ் கோப்பை என 4 டிவிஷன்களாக போட்டிகள் நடத்தப்பட்டதில் முதல் டிவிஷன் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பையை வென்று திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்டஸ் கிளப் அணி பரிசை பெற்றது.
விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் 2ம் இடம் பிடித்தது.
சிறந்த பேட்ஸ் ேமனாக விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் சிசியின் முகேஸ்வரன், பவுலராக ஜாஹீர் சிசி பாலாஜி, ஆல்ரவுண்டராக இளையராஜா தேர்வானர்.இரண்டாவது டிவிஷன் பிரஸித்தி வித்யோதையான கோப்பையை நத்தம் என்.பி.ஆர்., குழுமம் வென்றது. 2 ம் இடத்தை வேடசந்துார் ஜாகீர் பிராமிஸிங் லெவன் அணி பிடித்தது.
சிறந்த பேட்ஸ்மேனாக பழநி யுவராஜ் சிசி கவியரசு, பவுலராக பிரதீப், ஆல்ரவுண்டராக என்.பி.ஆர்., சுந்தர வடிவேல் தேர்வாகினர். 3 வது டிவிஷன் ஓட்டல் பார்சன் கோர்ட் கோப்பையை வேடசந்துார் சீனிபாலா அணி வென்றது.
திண்டுக்கல் காட்சன் சிசி 2ம் இடம் பிடித்தது. சிறந்த பேட்ஸ்மேனாக சீனிபாலா லோகநாதன், ஆல்ரவுண்டராக நாகமணிகண்டன், பவுலராக மன்சூர் சிசி பூபதிராஜா தேர்வாகினர்.
4 வது டிவிஷன் மது ஸ்கேன்ஸ் கோப்பையை திண்டுக்கல் ஆல்ரவுண்டர்ஸ் சிசி அணி வென்றது. ஸ்கை சிசி 2 ம் இடம் பிடித்தது.
சிறந்த பேட்ஸ்மேனாக ஸ்கை சிசி மணிகண்டன், பவுலராக முகமதுயாசின், ஆல்ரவுண்டராக ஆல்ரவுண்டர் சிசி பிரசாந்த் தேர்வாகினர்.
பிராமினென் விருது களுக்கு சிறந்த இளம் வீரராக பிரஸித்தி வித்யோதயாவின் தஸ்வின், இளம் வீராங்கனையாக விஸ்வ ஹரிணி, இந்த ஆண்டிற்கான சிறந்த பள்ளி கிரிக்கெட் வீரராக செட்டிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பிரகாஷ்ராஜ், வீராங்கனையாக பட்ஸ் ஹிண்டு வித்தியாலயா அஸ்ரங்கா, கல்லுாரி கிரிக்கெட் வீரராக சென்னை குருநானக்கல்லுாரி பூபதி வைஸ்ணகுமார், கல்லுாரி வீராங்கனையாக ஜி.டி.என்., கல்லுாரி ஜெய்சிவஸ்ரீ, இந்த ஆண்டின் சிறந்த வீரராக கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சிசியின் முகமது, வீராங்கனையாக விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் சிசியின் மதுமிதா அன்பு, அதிக போட்டிகளில் அம்பையரிங் செய்த நடுவராக மெஜஸ்டிச் சிசி கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கான பரிசளிப்பு விழா திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 40வது ஆண்டுவிழாவோடு நடத்தப் பட்டது.
பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் ரகுராம் தலைமை வகித்தார்.
உதவித்தலைவர் செந்தில்கணேஷ் வரவேற்றார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பழனி , உதவிச்செயலாளர் பாபா பேசினர்.
இந்திய கிரிக்கெட் வீரர் வருண்சக்கரவர்த்தி பரிசு வழங்கினார்.
உதவித் தலைவர் வெங்கட்டராமன் நன்றி கூறினார். மேலும் விழாவில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் உதவி தலைவர்கள் டாக்டர் பாபு,சித்தாந் மற்றும் ரோஹான் சாம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செயலாளர் அமர்நாத், இணைச்செயலாளர்கள் ராஜமோகன், மகேந்திரகுமார், பொருளாளர் முத்துக்குமார் செய்திருந்தனர்.