sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செயலர் இல்லாத ஊராட்சிகளின் நிர்வாக பணிகளில்  சிக்கல்: பணியாளர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்த ஆவணங்கள்

/

செயலர் இல்லாத ஊராட்சிகளின் நிர்வாக பணிகளில்  சிக்கல்: பணியாளர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்த ஆவணங்கள்

செயலர் இல்லாத ஊராட்சிகளின் நிர்வாக பணிகளில்  சிக்கல்: பணியாளர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்த ஆவணங்கள்

செயலர் இல்லாத ஊராட்சிகளின் நிர்வாக பணிகளில்  சிக்கல்: பணியாளர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்த ஆவணங்கள்


ADDED : பிப் 12, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்டுப்பாட்டில் இருந்த போதும், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணிப்பில் இவற்றின் செயல்பாடுகள் இருக்கும். அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, கழிவுநீர் கால்வாய், கிராமப்புற ரோடு, சிறு பாலங்கள், நுாலகம், பொழுது போக்கு, விளையாட்டு மையம் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பராமரித்தல் முக்கிய பணிகளாக உள்ளன. இவை மட்டும் இன்றி ஊராட்சியின் வரவு செலவுத் திட்ட தயாரிப்பு, கிராம சபை, வேலை உறுதி திட்ட பணிகள், புறம்போக்கு நில பராமரிப்பு, ஒன்றிய ரோடு, ஊராட்சி பணியாளர்கள் சம்பளம், பதிவேடு பராமரிப்பு, அரசு, ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள், அதிகாரிகள் வழங்கும் பணிகள் போன்றவற்றை நிர்வாகிக்கும் உதவியாளராக ஊராட்சி செயலர்கள் உள்ளனர்.கடந்த சில ஆண்டுகளில் மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளின் செயலர்கள், பதவி உயர்வு மூலம் ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று விட்டனர்.

மேலும் சில ஊராட்சிகளில் இறப்பு, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால், செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிர்வகிக்கும் பணி, கூடுதல் பொறுப்பாக பிற ஊராட்சி செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் வழக்கமான பணிகளுடன் பல்வேறு திட்ட, மாவட்ட அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள், வழக்குகள் தொடர்பான பணிகள் என சுமை அதிகரித்து வருகிறது.

அலட்சியம் கிராமசபை நாட்களில் ஒன்றிற்கு மேற்பட்ட ஊராட்சிகளில் (பொறுப்பு ஊராட்சிகள் உள்பட) ஏற்பாடுகளை கவனிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களைக் கூறி, எங்கும் செல்லாமல் சொந்த வேலைகளில் ஈடுபடுவோரும் உண்டு. அதிகாரிகள் இருப்பிடத்தை மாற்றி தகவல் தெரிவிப்பதுடன், பணிகளை கண்காணிப்பதில் அலட்சியப்போக்கு புகார்களும் தொடர்கின்றன.

தஞ்சம் அடைந்த ஆவணங்கள் பெரும்பாலான ஊராட்சி அலுவலகங்கள் சரிவர திறக்கப்படாமல், உள்ளாட்சி பிரதிநிதிகளின் வீடுகளில் நிர்வாக ஆவணங்கள், ஊராட்சி தளவாடங்கள் தஞ்சம் புகுந்த அவலங்களும் அதிகரித்து வருகிறது. சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்காக அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள், அலைக்கழிப்பிற்கு உள்ளாகி வருவது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம், காலியாக உள்ள ஊராட்சிச் செயலர் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இப்பிரச்னைகளை குறைக்க முடியும்.---






      Dinamalar
      Follow us