ADDED : ஜூன் 28, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் ரோடு மார்க்கெட் பைபாஸ் ரோடு சந்திக்கும் இடத்தில் பிளக்ஸ்கள், பேனர்கள் வைப்பதால் ரோட்டில் வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என தினமலர் நாளிதழ் வார்டு ரவுண்டு பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து இப்பகுதியில் பிளக்ஸ்கள், பேனர்கள் வைப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.