/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர், மின்சார வசதி கேட்டு மறியல்
/
குடிநீர், மின்சார வசதி கேட்டு மறியல்
ADDED : ஆக 12, 2025 06:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் குடிநீர், மின்சார் வசதி கேட்டு பொதுமக்கள் தாடிக்கொம்பு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 1-வது வார்டு பாலதிருப்பதி பகுதியில் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.
மின்சார வசதியும் சரிவர செய்யப்படவில்லை.இந்நிலையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மதியம் திண்டுக்கல் -தாடிக்கொம்பு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர்.
அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக உறுதியளிக்க கலைந்து சென்றனர்.