ADDED : நவ 18, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: தர்மத்துப்பட்டி காலனி பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கிய நிலத்தை மீட்பதில் வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியத்தை கண்டித்து, செம்பட்டி-பழநி ரோட்டில் மறியல் நடந்தது.
மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சக்திவேல், வி.சி.க., நிர்வாகி பிரபாகரன் முன்னிலை வகித்தனர். தருமத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி பேச்சுவார்த்தை நடத்தினார். திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சம்மதித்து கலைந்தனர். -

