ADDED : ஜூலை 18, 2026 01:34 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதை கண்டித்து டி.எம்.ஐ., தொண்டு நிறுவனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பூண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தலைமை வகித்தார். சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியில் மது ஒழிப்பு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்கள், பொதுமக்கள் கோஷமிட்டனர்.
கொடைக் கானல் போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.
